தொடர் தோல்வி...பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பதவி விலகல்!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (15:48 IST)
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பாகிஸ்தான்  மகளிர் கிரிக்கெட்  அணியின் கேப்டனாக இருந்தவர் பிஸ்மா மரூப். இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், அந்த அணியின் கேப்டனாகப் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்தியா உள்ளிட்ட 3 அணிகளிடம் தோல்வி அடைந்ததால், அரையிறுதிக்குச் செல்லவில்லை என்று பாகிஸ்தான்  நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து பிஸ்மா மரூப் விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:'' பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்ததை பெருமையாகக் கருதுகிறேன்.  என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் கொண்டதாக இருந்தாலும் உற்சாகமானது. அடுத்த உலகக் கோப்பை(2024) போட்டிக்கு இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்க நான் பதவி விலகுகிறேன் ''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்