இதுபற்றி சமீபத்தில் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அவர் “அவர்கள் மிகப்பெரிய வீரர்கள். இப்போது உலகக்கோப்பை நடந்து வரும் நிலையில் பாதியில் நான் யாரைப் பற்றியும் பேச முடியாது. அவர்களிடம் இருந்து இளைஞர்கள் அதிகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். யாருக்கும் அணியின் கதவுகள் மூடாது. தொடர்ந்து ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் மூத்த வீரர்களை அணியில் எடுப்பது மகிழ்ச்சிதான்” எனக் கூறியுள்ளார்.