எடுடா வண்டிய.. போடுடா விசில..! – அமீரகத்தில் சிஎஸ்கே மாஸ் எண்ட்ரி!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (12:08 IST)
ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி அரபு அமீரகத்தை சென்றடைந்துள்ள நிலையில் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹீரின் ட்வீட் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரபு அமீரகம் சென்றடைந்துள்ளது. தோனி தனது ஓய்வை அறிவித்த பிறகு ஆடும் போட்டிகள் இதுவென்பதால் பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அமீரகம் சென்றைடைந்த இம்ரான் தாஹீர் தனது ட்விட்டரில் “என் இனிய தமிழ் மக்களே! உங்கள் நலம் அறிய ஆவல். பலமுறை வந்தோம், வென்றோம், சென்றோம்.. இம்முறை வருகிறோம், வெல்வோம், செல்வோம்.. உங்கள் நல்லாசிகளோடு..! பார்க்கத்தான போறீங்க காளியோட ஆட்டத்த.. எடுடா வண்டிய போடுடா விசில..” என்று பதிவிட்டுள்ளார்.

தாஹீரின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ள நிலையில், இந்த முறை தோனிக்கு ட்ரிப்யூட் தருவதற்காக சிஎஸ்கே வெற்றி பெறும் என பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்