உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பாகிஸ்தான்!

vinoth

சனி, 15 ஜூன் 2024 (07:07 IST)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் நாசாவ் மைதானத்தில் 8 போட்டிகள் வரை நடத்தப்பட்டன. ஆனால் இந்த மைதானத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்களே சேர்க்க முடியாத இக்கட்டுக்கு ஆளாகினர்.

இதனால் சில போட்டிகளின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மாறாக அதிர்ச்சிகரமாக அமைந்தன. அப்படி ஒரு போட்டிதான் பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8க்கு செல்வது சிக்கலானது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை முழுவதுமாக இழந்துள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளிலேயே வெளியேறியது போல டி 20 உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்