கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம்… இன்று கூடும் பிசிசிஐ தேர்வுக்குழு!
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:00 IST)
இந்திய அணி ஜனவரி மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.
உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி அடுத்து இலங்கையோடு ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்ய, இன்று பிசிசிஐ தேர்வுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.
இதில் குறிப்பாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி, ஆகியோரின் டி 20 எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் இலங்கை தொடருக்கான அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.