எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

vinoth

வெள்ளி, 9 மே 2025 (14:21 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதே போல பாகிஸ்தானில் நடந்து வரும் PSL தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரையும் தென்னாப்பிரிக்காவில் நடத்தலாமா என பிசிசிஐ ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு முழு ஐபிஎல் தொடரும் தென்னாப்பிரிக்காவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்