பிசிசிஐ வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த தொடர், அக்டோபர் 4 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கு முன்னர்தான் ஆசிய கோப்பை தொடர் நிறைவடைகிறது.
இந்நிலையில், இது போன்று அடுத்தடுத்து இடைவிடாமல் கிரிக்கெட் தொடர்களை நடத்த பிசிசிஐக்கு என்ன அவசியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பலம் வாய்ந்ததாக இல்லாத நேரத்தில், இந்தியாவிற்கு நிச்சம் வெற்றி கிடைக்கும் என்ற பட்சத்தில் எதற்காக இந்த தொடர் என்றும் பேச்சுக்கள் எழுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் உடன் கிரிக்கெட் ஆடுவதில் தவறில்லை. இதனை பயிற்சிகாக இருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும், ஆனால், இப்படி நேரமே இல்லாமல், ஓய்வே இல்லாமல் ஏன் அட்டவணை தயார் செய்யப்படுகிறது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
இந்தியா இந்த ஆண்டு முழுவதுமே, ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து தொடர், அடுத்து இங்கிலாந்து தொடர், அடுத்த 7 நாட்களில் ஆசிய கோப்பை, அது முடிந்த 4 நாட்களில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்.
இதற்கு அடுத்த 10 நாட்களில் ஆஸ்திரேலியா தொடர், அடுத்து நியூசிலாந்து தொடர் என வீரர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் போட்டி அட்டவணைகளை பிசிசிஐ தயாரித்து உள்ளது.