டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 68 ரன்களும், டீகாக் 53 ரன்களும் எடுத்தனர்.
206 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் தல தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல் ராயுடு 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.