119 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் படுதோல்வி அடைந்த மும்பை
புதன், 25 ஏப்ரல் 2018 (04:55 IST)
நேற்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் மும்பை அணிகளூக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு ஐதராபாத் கொடுத்த 119 என்ற இலக்கை விரட்ட முடியாமல் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மும்பை அணி படுதோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்த நிலையில் 119 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, ஐதராபாத் அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
யாதவ் 34 ரன்களும் பாண்ட்யா 24 ரன்களும் அடிக்க மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர்.
மும்பை அணியின் கவுல் 3 விக்கெட்டுக்களையும் ரஷித் கான் மற்றும் பசில் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ரஷித்கான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்