36 வயதான இவர், இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் போட்டியில் 55, மற்றும் 8,3, 4 என முறையே அடுத்தடுத்த போட்டிகளில் ரன் எடுத்துள்ளார்.
இந்நிலையில், அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கம்பீர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இது என்னுடைய முடிவு, நான் அணிக்கு போதுமான அளவு பங்களிக்கவில்லை. அணிக்கு தலைவர் என்ற பொறுப்பை நான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது, சரியான நேரம் என்று உணர்ந்தேன்.
ஆனால், கடினமான சூழ்நிலைகளில் என்னால் திறம்பட செயல்பட முடியவில்லை. ஆகையால், கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுகிறேன் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.