நடுவரிடம் காரசார விவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின்.. பின்னணி என்ன?

vinoth

சனி, 3 பிப்ரவரி 2024 (08:01 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதல் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 179 ரன்கள் சேர்த்தார். நேற்றைய ஆட்ட முடிவின் போது 89 ஆவது ஓவரில் அவர் கையில் வலி இருப்பதாகக் கூறி மருத்துவ உதவிக் கேட்டார். ஆனால் நடுவரோ ஓவர் இடைவேளையின் போது பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார்.

அதன் பின்னர் அடுத்த ஓவரில் பரத் அவுட்டாக பேட் செய்ய வந்த அஸ்வின் இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் திரும்பிய போது நடுவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். அப்போது அவரிடம் நடுவர் பணிவாக பதிலளித்து வந்தார். ஜெய்ஸ்வாலுக்கு மருத்துவ உதவி தள்ளிப் போட்டது மற்றும் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் ஓவர் கொடுத்தது குறித்து அஸ்வின் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்