2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ரோபிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்!

சனி, 4 நவம்பர் 2023 (06:57 IST)
லக்னோவில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் முதல்தரமான சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து அணி 174 ரன்களில் ஆட்டமிழந்தது. முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களின் 4 முனைத் தாக்குதலை நெதர்லாந்து அணி தாங்க முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்தது.

இதையடுத்து பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் 7 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இன்னும் பிரகாசமாக்கியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் கலந்துகொள்ள ஏழாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்