லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், எல்ஜில்பிரெட்ச் 58 ரன்னும், மேக்ஸ் 42 ரன்னும், கூலின் 29 ரன்னும் அடித்தனர். 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 180 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மதுல்லா 56 ரன்னும், அஹ்மத் ஷா 52 ரன்னும், அஸ்மதுல்லா 31 ரன்னும் அடித்தனர். எனவே 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.