மளமளவென விக்கெட்டுக்களை இழந்த நெதர்லாந்து.. ஆப்கானிஸ்தான் இலக்கு இதுதான்..!

வெள்ளி, 3 நவம்பர் 2023 (17:24 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் நெதர்லாந்து அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே இலக்காக ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்துள்ளது.
 
இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது. குறிப்பாக  வரிசையாக ரன் அவுட்டுக்களில் அந்த அணி 4 விக்கெட்டுக்களை இழந்தது.
 
இந்த நிலையில் 46.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.  இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ள நிலையில் அந்த வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. 
 
இன்று நல்ல ரன்ரேட்டில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்