இந்த ஆண்டு இறுதியில் உலகக்கோப்பை டி 20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்காக எல்லா அணிகளும் தயாராகி வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்கு பல இளம் வீரர்கள் கிடைக்க உள்ளனர். ஆனால் இந்த சீசனில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்கள் தங்கள் மோசமான ஃபார்மில் இருக்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா டி 20 உலகக்கோப்பைக்கான தன்னுடைய அணியை தேர்வு செய்துள்ளார். அதில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அவர் இடம் அளிக்கவில்லை. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகாஷ் சோப்ராவின் அணி
கேஎல் ராகுல், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், குருனால் பாண்டியா, யஜுவேந்திர செஹல், முகமது ஷமி, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா .