விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு !!

வெள்ளி, 3 ஜூன் 2022 (17:00 IST)
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு காரணமாக 98பயணிகளுடன் விமானம் சென்னை விமான நிலையத்தில் நிற்கிறது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்திய விமானத்தில் 98 பயணிகள் உட்பட சுமார் 104 பேர் இருந்தனர்.

விமான ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கியதும், இயந்திய கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அங்கேயே விமானம் நிறுத்தப்பட்டது.  இதனால், பயணிகள் உயிரி தப்பினர். இன்று 12 மணிக்கு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் விமானம் இயக்கப்படாததால், விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்