6 ஓவருக்கே 6 விக்கெட்டுகள் காலி! – இலங்கையை வெச்சு செய்த இந்திய அணி!

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (16:33 IST)
ஆசியக்கோப்பை இறுதி போட்டிகள் தொடங்கி சில நிமிடங்களே ஆன நிலையில் 6 ஓவருக்கே 6 விக்கெட்டுகள் காலியாகி இலங்கை பரிதாபமான நிலையில் உள்ளது.ஆசியக்கோப்பை போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிக் கொள்கின்றன. 3 மணிக்கு தொடங்கிய போட்டி மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. உள்ளே நுழைந்துமே பெரேராவின் விக்கெட்டை ஜாஸ்ப்ரிட் பும்ரா தூக்கினார். தொடர்ந்து பந்து வீச வந்த முகமது சிராஜ் 3 ஓவர்களில் (15 பந்துகள்) தொடர்ந்து அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

தற்போதைய நிலவரப்படி 8 ஓவர்களிலேயே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது. இலங்கை அணி மிக மோசமான தோல்வியை தழுவும் ஆபத்தில் உள்ள அதே சமயம் ஆசியக்கோப்பையிலேயே மிக குறைவான ரன்களில் நடப்பு சாம்பியன் அணியை சுருட்டி வெற்றி பெறும் வாய்ப்பும் இந்தியாவிற்கு உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்