4 வது டி-20: இந்திய அணியின் பந்து வீச்சில் திணறும் வெஸ்ட் இண்டீஸ்

சனி, 12 ஆகஸ்ட் 2023 (20:35 IST)
ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான  இந்திய கிரிக்கெட் அணி  வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இதில், ஏற்கனவே நடைபெற்ற  டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது  5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடைபெற்ற  இரு டி 20 போட்டிகளிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது. மூன்றாவது டி- 20 போட்டியில் இந்திய அணி முதல் வெற்றி வெற்றது.

எனவே  2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

நான்காவது டி 20 போட்டி லாடர்ஹில் நகரில் தற்போது நடந்து வருகிறது.  இதில், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில்  பேட்டிங் செய்து வருகிறது,

மேயர்ஸ் 17 ரன்னும், கிங் 16 ரன்னும், போரன் 1 ரன்னும், பவல் 1 ரன்னுடன் அவுட்டாகினர்.ஹோப் 24 ரன்னுடன், ஹெல்மர் 1 ரன்னுடனும்  8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்னுடன்  விளையாடி வருகின்றனர்.
 
இந்திய அணி சார்பில், அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்