தேசிய திரைப்பட விழாவில் ரஜினி குடும்பத்தினர் - வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:40 IST)
தாதா சாகேப் விருது விழாவில் ரஜினி குடும்பத்தினர்!
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
இதற்காக ரஜினி தனது மனைவி , மகள் , மருமகன் , மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தினருடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று டெல்லிக்கு சென்றனர். இந்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினி குடும்பத்தினர் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே விழாவில் அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இயக்குனர் வெற்றிமாறானும், கலைப்புலி தாணுவும் பெறுவது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்