பாரம்பரிய கிறிஸ்மஸ் புட்டிங்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2012 (18:37 IST)
பாரம்பரி ய கிறிஸ்மஸ ் திண்பண்டமா க விளங்கும ் புட்டிங்க ை வீட்டில ் எளிதாக செய் ய தயாராகுங்கள ்.


 

தேவையானவ ை:

ப்ரெட் (உதிர்த்தது ) - 1/2 கப்
திராட்சை, முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா - 2 கப்
சக்கரை - 1 1/4 கப்
முட்டை - 4
வெண்ணெய் - 250 கிராம்
ஏலக்காய் பொடி

செய்முற ை:

உதிர்த்த ப்ரெட் துகள்களை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் உலர்ந்த திராட்சை, முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்த ா, சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மிருதுவாக கைகளால் கிளறவும். இந்த கலவையுடன் முட்டைகளை (நன்கு அடித்த) சேர்த்து கிளறவும்.

ஒரு பாத்திரத்தின் உட்புறம் வெண்ணெய்யை நன்கு தடவி, புட்டிங் கலவையை அதில் கொட்டவும்.

மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி, கொதித்தவுடன் புட்டிங் பாத்திரத்தை அதில் வைத்து நிறம் மாறியதும் இறக்கினால் சுவையான பாரம்பரிய கிறிஸ்மஸ் புட்டிங் ரெடி.
அடுத்த கட்டுரையில்