பிளாஸ்டிக்கால் ஆன டிபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டிபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டிபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.
பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு காலை உணவுவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்குதீனிற்க்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும். குழந்தைகளுக்கு நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.