இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதுமட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பகத்திற்கான பூஜை சமீபத்தில் துவங்கியுள்ளது. விஜயநகரத்தில் உள்ள கொண்டான்டரம் கோவிலில் நடிகர் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் இருவரும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டனர்.