யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தில் ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. விஜிபி ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த காட்சியில் யோகி பாபு, யாஷிகா உள்ளிட்டோருடன் சுமார் 200 பெண்கள் நடித்துள்ளனர்.
சென்னை-புதுச்சேரி இடையே ஈ.சி.ஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து இசை, டிரைலர், ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.