துபாய் பிளாட் பார்மில் தூக்கலான கவர்ச்சி காட்டிய பாவனா!

திங்கள், 29 நவம்பர் 2021 (16:33 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.
 
சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.
 
இதனிடையே புது ஆங்கர்களின் வரவால் கொன்ஜம் கேப் விட்டு ஜாலியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் அடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது நெருங்கிய தோழி பிரபல பிக்பாஸ் சம்யுக்தாவுடன் துபாய்க்கு ட்ரிப் அடித்துள்ளார். அங்கிருந்தபடியே கவர்ச்சியான உடைகளை அணிந்து ஹாட்டாக சுற்றித்திரிந்து போஸ் கொடுத்து வருகிறார். தற்போது பிளாட்பார்மில் பார்ட்டி உடையில் ஹாட்னஸ் அள்ளித்தெளித்துள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்