ஆதரவுக்கு நன்றி, ஆனா உங்கள் கணவர் லட்சணம் என்ன? தனுஸ்ரீ பளார்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (19:17 IST)
பிரபல பாலிவுட் நடிகரும், காலா படத்தில் வில்லனாக நடித்த நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்ர நாயகிகளுள் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 
 
ஆனால் நானா படேகர், என் மீது தனுஸ்ரீ தத்தா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் என்பதற்கு அர்த்தம் என்ன? என அப்பாவியாக கேள்வி கேட்டார். 
 
தனுஸ்ரீ தத்தாவிற்கு பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், பிரினீதி சோப்ரா, டிவிங்கிள் கண்ணா உள்ளிட பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், டிவிங்கிள் கண்ணாவின் ஆதரவிற்கு விமர்சனம் செய்துள்ளார். 
 
இது குறித்து தெரிவித்த தனுஸ்ரீ, உங்கள் ஆதரவிற்கு நன்றி. ஆனால், உங்கள் கணவர் (அக்‌ஷய் குமார்) நானா பாடேகருடன் ஹவுஸ்புல் 4 படத்தில் நடித்து வருகிறார். இதனால், உங்களது ஆதரவை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும். 
 
பெண்களை தவறாக நடத்துபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என கூறி வருகிறேன். ஆனால், உங்கள் கணவர் செய்வது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்