கடந்த சில வருடங்காளாகவே உடல் நலப் பிரச்சனைகளால் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு டிசம்பர் மாதம் காய்ச்சலாலும், வலது கால் வீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணம் பெற்று வீடு திரும்பினார்.
நேற்று திடீரென மயங்கி விழுந்தார். தற்போது 94 வயதான திலீப்குமார் மும்பை மேற்குபந்த்ரா பகுதியில் மனைவி சாய்ராபானுவுடன் வசித்து வந்தார். சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். மேலும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.