உத்தரபிரதேசத்தில் மட்டும் மீண்டும் யாத்திரை.. ராகுல், பிரியங்கா காந்தி பங்கேற்பு..!

Siva

ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:45 IST)
தேர்தலுக்கு முன்னர் தேசிய அளவில் ராகுல் காந்தி யாத்திரை நடத்திய நிலையில் தற்போது தேர்தலுக்குப் பின்னர் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
உத்திரபிரதேசம் மாநிலம் என்பது பாஜகவின் கோட்டை என்று கூறப்பட்ட நிலையில் அங்கு இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் யாத்திரை நடத்தப்பட உள்ளதாகவும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொள்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
ராகுல் காந்தியின் தேசிய நடைப்பயணம் மக்கள் இடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி அரசியல் சாசனத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உத்தரபிரதேச மக்கள் காப்பாற்றி உள்ளனர் என்றும் வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் நன்றி யாத்திரை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உத்தர பிரதேச மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்