எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி.? காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்..!!

Senthil Velan

சனி, 8 ஜூன் 2024 (15:02 IST)
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில்  மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
 
காங்கிரஸ் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.சி வேணுகோபால், சமூக நீதி, ஜனநாயகம் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

ALSO READ: நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்..! மல்லிகார்ஜுன் கார்கே..!!
 
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுலை நியமிக்க கோரி காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும்  காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்த இடங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும் என்று கே.சி வேணுகோபால் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்