வரலாற்றை சிதைக்கும் தீபிகா: அரசியலாக்கப்படும் சினிமா படங்கள்!!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:06 IST)
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ள படம் பத்மாவதி.


 
 
இந்த படம் ஒரு வரலாற்று கதையை தழுவி எடுத்துள்ள படமாகும். ஆனால், இந்த படத்திற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
குஜராத்தில் தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளிடக்கூடாது என தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் உண்மை கதை திரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
ராணி பத்மாவதி நடனம் ஆடியதே கிடையாது ஆனால், தீபிகா நடனம் ஆடி வரலாற்று உண்மைகளை சிதைக்கிறார். ஆதே போல் ரன்வீர் சிங் போன்ற ஒருவரெல்லாம் அலாவுதின் கில்ஜி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது அதிர்ச்சியை அளிக்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
சஞ்சய் லீலா பன்சாலி ஒரு படத்தை எடுக்க பல கதைகள் உள்ளது அதை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக வரலாற்று படங்களை தவறான வகையில் சித்தரித்து வெளிபடுத்துகிறார் என்றும் கேள்வி எழுப்பபட்டுள்ளது.
 
டிசம்பர் மாதம் வெளியாக இருந்த படம் தற்போது எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளால் எப்போது வெளியாகும், குறித்த தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்