லிப்லாக் காட்சியில் நடித்துவிட்டு டெட்டால் ஊற்றி வாய் கழுவிய லஸ்ட் ஸ்டோரீஸ் 2 நடிகை!

புதன், 28 ஜூன் 2023 (12:48 IST)
பாலிவுட்டில் மிகவும் பிரசித்திபெற்ற வெப் தொடரான லஸ்ட் ஸ்டோரீஸ் பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாடம் "லஸ்ட் ஸ்டோரீஸ்" தொடரில் கியரா அத்வானி , விக்கி கௌஷல் இணைந்து நடித்திருந்தனர். 
 
அதையடுத்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடர் நாளை நெட்பிலிக்சில் வெளியாகிறது. இந்த படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இந்த தொடரின் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகையான நீனா குப்தா (64) பேட்டி ஒன்றில், " பல வருடங்களுக்கு முன்பு சீரியலில் திலீப் தவானுடன் இணைந்து நடித்தேன். அப்போது அதில் லிப் லாக் முத்த காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்திய தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு லிப்லாக் அது தான். 
 
அந்த காட்சியில் நடிக்க நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக இல்லை. மேலும், மிகுந்த பதற்றத்துடன் தான் இருந்தேன். திலீப் என்னுடைய நண்பன் இல்லை. தெரியாத ஒருவரை முத்தமிடுதல் போல் நடிப்பது மிக கடினமாக இருந்தது. இருப்பினும் நான் ஒரு நடிகை என்பதால் சகித்துக்கொண்டு நடித்தேன். எனக்கு அது பிடிக்கவும் இல்லை எனவே அந்த காட்சி முடிந்த பிறகு டெட்டால் ஊற்றி எனது வாயை சுத்தம் செய்தேன்" என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்