அவமானப்படுத்தி மார்க்கெட்டை சறுக்க திட்டம்? முன்னணி நடிகைக்கே இப்படியொரு நிலைமையா?

செவ்வாய், 20 ஜூன் 2023 (12:15 IST)
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். 
 
தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு சினிமாவுக்கு உண்மையாக உழைத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிகம் சம்பளம் வாங்கும் ஹிட் நடிகை  லிஸ்டில் இடம் பிடித்தார். துவ்வட ஜெகந்நாதம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து ரங்கஸ்தலம் , மஹரிஷி, ஆல வைகுந்தப்புராமுலு உள்ளிட்ட படங்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் அமர வைத்தது. தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவின் GunturKaaram எனும் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடிக்க இருந்தார். ஆனால் திடீரென அவர் இப்படத்திலிருந்து காரணம் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பூஜா ஹெக்டே ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். கமிட் செய்தபின் பூஜா ஹெக்டேவை அவமானப்படுத்தி அவரது மார்க்கெட்டை சறுக்க சதித்திட்டம் தீட்டி  தான் இப்படி செய்துள்ளார்களா என டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் முன்னணி நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்