ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ’பிரேமலு’ மமிதா பாஜூ.. சென்னையில் பரபரப்பு..!

Siva

திங்கள், 3 ஜூன் 2024 (15:00 IST)
சென்னையில் தனியார் கடை திறப்பு விழாவிற்கு மமிதா பாஜூ ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரேமலு என்ற மலையாள படத்தில் நடித்த மமிதா பாஜூ தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒன்று பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் சென்னையில் கடை திறப்பு விழாவுக்கு ஒன்று வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிவிட்டார். இதனை அடுத்து அவரை காவல்துறையினர் மற்றும் பாதுகாவலர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
 
ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுக்கவும் பரிசு பொருட்களை கொடுக்கவும் முந்தி அடித்ததால் மமிதா பாஜூ பெரும் சிரமப்பட்டதாகவும் போலீஸ் பாதுகாப்புடன் அதன் பிறகு அவரை அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மமிதா பாஜூ நடித்த பிரேமலு என்ற ஒரே ஒரு படம் மட்டுமே  சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்