ஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்தாரா? திஷா பதானி பதில்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (13:16 IST)
ஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்தாரா? திஷா பதானி பதில் ஹிரித்திக் ரோஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நடிகை திஷா பதானி தெரிவித்துள்ளார்

நடிகை திஷா பதானிக்கு படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோ‌ஷன் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் திஷா பதானி அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து திஷா பதானி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

‘‘ஹிருத்திக் ரோ‌ஷனையும், என்னையும் பற்றியும் வரும்  வதந்தி குழந்தைத்தனமானது. அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. ஹிருத்திக் ரோ‌ஷன் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்குமாறு இயக்குனர் என்னை அணுகவே இல்லை. ஹிருத்திக் ரோ‌ஷனுடன் நான் சில முறை மட்டுமே பேசி இருக்கிறேன். அவர் என்னிடம் எப்போதும் மரியாதையாக நடப்பவர். எனவே இதுபோன்ற வதந்திகளை கிளம்பி விடாதீங்க." இவ்வாறு திஷா பதானி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்