உலக அளவில் வசூல் சாதனை படைத்த தங்கல்!!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (14:17 IST)
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்த தங்கல் படம் கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. 


 
 
படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்தது. தங்கல் படம் இதுவரை இந்தியாவில் ரூ.426 கோடியும், வெளிநாடுகளில் ரூ.158.7 கோடியும் வசூல் செய்துள்ளது. 
 
ஆகமொத்த, ஆமீர் கானின் தங்கல் படம் உலக அளவில் ரூ.585 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 
 
சல்மான் கான் மல்யுத்த வீரராக நடித்த சுல்தான் படம் மொத்தமாக ரூ.572 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், மல்யுத்த வீரரான மகாவீர் சிங் போகத் தனது மகள்கள் கீதா குமாரி மற்றும் பபிதாவை மல்யுத்த வீராங்கனைகளாக்கி அழகு பார்த்த உண்மை கதை தான் தங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்