ஆமீர்கான் நடித்த டங்கல் திரைப்படம் விரைவில் சீனாவில் வெளியாக உள்ளதால் பாகுபலி 2 குவித்த வசூல் சாதனையை முறியடிக்கப்படும் என கூறப்படுகிறது.
அண்மையில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் எனற பெருமையை பெற்றுள்ளது. ஆமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் படம்தான் அதிக வசூல் சாதனை செய்த திரைப்படமாக இருந்தது. ஆனால் அதை பாகுபலி முதல் வாரத்திலே முறியடித்துவிட்டது.
இந்நிலையில் ஆமீர்கான் நடித்த டங்கல் திரைப்படம் சீனாவில் 9000 திரையரங்களில் விரைவில் வெளியாக உள்ளது. இதனால் பாகுபலி 2 குவித்த வசூல் சாதனையை டங்கல் படம் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டங்கல் திரைப்படம் நாடு முழுவதும் அமோக வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.