அமீர்கான் மகள் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (14:51 IST)
அமீர்கானின் 'தங்கல்' திரைப்படத்தில் அமீர்கானின் மகளாக நடித்து புகழ் பெற்றவர் சாய்ரா வாசிம். காஷ்மீர் நடிகையான சாய்ரா,  சென்ற கார் பொலிவார்ட் சாலை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துள்ளாகியது.

 
இதனை பார்த்து அங்கு கூடிய பொதுமக்கள் சாய்ராவை பத்திரமாக மீட்டனர். இவ்விபத்தில் சாய்ரா எவ்வித காயமுமின்றி உயிரி தப்பினார். அவருடன் பயணித்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டள்ளது. இதனால் இச்சம்பவம் அங்கு பரபரப்பை  ஏற்படுத்தியுள்ள்து.
 
சமீபத்தில் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை சந்தித்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால், விமர்சனங்களுக்கு  பிறகு அந்த பதிவினை நீக்கி மன்னிப்பு கோரியது சாய்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்