டென்னிஸ் ராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்த தாங்க முடியாத துயரம்
புதன், 18 ஜனவரி 2023 (23:27 IST)
2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றிலேயே நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட்- நடப்பு சாம்பியனும் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவருமான ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர். இடுப்பு வலியால் அவதிப்பட்ட நடால் இந்த ஆட்டத்தில் மெக்கன்ஸியை எதிர்த்து ஆடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டார். விளைவாக 6-4,6-3,7-5 என்ற கணக்கில் மெக்கன்ஸியிடம் அவர் தோல்வி கண்டார்.
ஆட்டத்திற்கு முன்பே தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால், இன்று அனுபவித்து போன்ற வலியை தான் அனுபவித்து இல்லை என்றும் நடால் குறிப்பிட்டார். “நீண்ட நாட்களுக்கு நான் மைதானத்தின் வெளியே இருக்கும் நிலைக்கு இந்த வலி கொண்டு செல்லாது என்று நம்புகிறேன். நிவாரணம் மட்டும் அல்ல. நல்ல நிலைக்கு நீங்கள் திரும்ப செய்ய வேண்டிய ஒட்டுமொத்த வேலைகளும் தான். இதுபோன்ற சூழல்களை பலமுறை எதிர்கொண்டுள்ளேன். நான், அதை செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால், அது எளிதானது அல்ல என்று நினைக்கிறேன். ” என்றும் அவர் தெரிவித்தார்.
22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் இந்த ஆட்டம் முடிந்ததற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில், “நான் மனரீதியில் நொறுங்கி போகவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், இதுவொன்று மிக மோசமானது கிடையாது. இறுதியில் பயிற்சிக்கு மூன்று வாரங்கள் உள்ளன ” என்று தெரிவித்தார்.
அதேவேளையில், டென்னில் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். “இறுதிவரை உங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுங்கள். உங்களிடம் உள்ள வாய்ப்புகள் இங்கு முக்கியமில்லை. அதுதான் விளையாட்டின் தத்துவம். அதுவே விளையாட்டின் சாராம்சம். எனது டென்னிஸ் வாழ்க்கை முழுவதும் நான் அதைப் பின்பற்ற முயற்சித்தேன், மேலும் சேதத்தை அதிகரிக்காமல் இருக்க முயற்சித்தேன், ஏனென்றால் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை ” என்றும் அவர் கூறினார்.
பலமுறை வலிகளால் அவதிப்பட்டுள்ள நடால் எதிர்கொள்ளும் சமீபத்திய உடல் ரீதியான பிரச்சினை இது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பிரஞ்ச் ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்றபின்னர், மரபு ரீதியிலான காயத்திற்காக தான் எடுத்துகொள்ளும் வலிநிவாரணிகளால் தனது இடது பாதத்தில் எவ்வித உணர்வுகளும் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இருந்து வயிறு வலி காரணமாக அவர் விலகினார். அதே காயம் பின்னர் யுஎஸ் ஓபனில் அவருக்கு இடையூறாக இருந்தது, அங்கு அவர் ஃபிரான்சஸ் தியாஃபோவுக்கு எதிராக நான்காவது சுற்றில் வெளியேறினார் மற்றும் அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது
காயங்களுக்கு மத்தியிலும் தன்னை மேற்கொண்டு செயல்பட வைப்பது விளையாட்டு மீது தான் கொண்டுள்ள காதல் தான் என்றும் நடால் கூறினார். “மிக எளிமையானது இது: நான் எதை விரும்புகிறேனோ அதை செய்கிறேன். டென்னிஸ் விளையாடுவதை நான் விரும்புகிறேன். இது எப்போதும் தொடராது என்பது எனக்கு தெரியும். என்னைப் போட்டியாக உணர விரும்புகிறேன். என் வாழ்க்கையின் பாதி அல்லது அதற்கும் மேலாக நான் போராடிய விஷயங்களுக்காக போராட விரும்புகிறேன். நீங்கள் விரும்புவதை செய்யும்போது, இறுதியில் அது தியாகம் கிடையாது.
தியாகம் என்பது நீங்கள் விரும்பாத செயலை செய்வது. ஆனால், என் விஷயத்தில் அப்படி அல்ல. எனினும், எனது டென்னில் வாழ்வில் பெரும்பாலான நேரத்தை காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கும் இதுபோன்ற விஷயங்களை எதிர்த்து போராடுவதற்கு செலவிடுவது அயற்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஆனால் எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் அதை நன்றாக ஏற்றுக்கொண்டேன், என்னால் அதை நன்றாக நிர்வகிக்க முடிந்தது. ஆனால் நிச்சயமாக கடந்த ஏழு மாதங்கள், மீண்டும், மற்றொரு கடினமான காலகட்டம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.