இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் தனியாக வந்த பெண் - தற்போது வரை 42 பேர் வருகை

புதன், 20 ஏப்ரல் 2022 (11:06 IST)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளுடன் தனியாக பெண் ஒருவர் படகில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.


இலங்கையின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால், இலங்கையில் இருந்து தமிழர்கள் 39 பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு வயது சிறுவனுடன் தனி ஒரு பெண்ணாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி, அவரது11 வயது மகள் மற்றும் 4 வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இறங்கி உள்ளனர்.

கடந்த மார்ச் 22ந்தேதி முதல் இன்றுவரை இலங்கையில் இருந்து 42இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கைப் போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவுமற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும்விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடுகாரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேசகடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும் என கடலோர பாதுகாப்புகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்