அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் நோக்கில், அக்டோபர் 2018 முதல் இதுவரை, கத்தார் தலைநகர் தோகாவில் தாலிபன்களுடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.