இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.