சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உயர்தர ஸ்மார்ட் செல்பேசிகள் சிலவற்றில் இருக்கும் பேட்டரிகள் வெடிப்பதாக வந்த புகார்களை அடுத்து, சாம்சங் நிறுவனம், புதிய மாடல் ஸ்மார்ட் செல்பேசி விற்பனையை இடைநிறுத்தியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையை தொடங்கிய பிறகு, 2 மில்லியனுக்கும் மேலான கேலக்ஸி நோட் 7-எஸ் செல்பேசிகளை தென் கொரிய நிறுவனமான சாம்சங் விற்பனை செய்திருக்கிறது.
இந்த செல்பேசியை ஏற்கனவே வாங்கியிருப்போருக்கு புதிய செல்பேசி வழங்கப்படும்.
இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டி நிறுவனமான ஆப்பிள், புதிய ஐஃபோனை வெளியிட இருப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, இவ்வாறு செல்பேசிகளை திரும்ப பெறுவதாக தெரிவித்திருப்பது, சாம்சங்கிற்கு கெட்ட பெயரை உருவாக்கும்.