ஓரினச் சேர்க்கை திரைப்படம்: தடை செய்த மத்திய கிழக்கு நாடுகள்!

புதன், 11 மார்ச் 2020 (17:01 IST)
லெஸ்பியன் பெற்றோர் தொடர்பான குறிப்புகள் உள்ளதால் ஆன்வேர்ட் திரைப்படத்துக்குத் தடை விதித்துள்ளன குவைத், ஓமன், கத்தார் மற்றும் செளதி அரேபியா ஆகிய நாடுகள்.
 
அதே நேரம், பஹ்ரைன், லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை. ஆனால், அதில் ஒரு பெண் கதாபாத்திரம் தான் லெஸ்பியன் என்று மறைமுகமாகக் கூறுவது போன்ற வசனம் வரும். 
 
அதற்காகத்தான் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. ரஷ்யா அந்த வசனத்தை மட்டும் நீக்கி உள்ளது. உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் போது வெளியாகி உள்ளதால், இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆஃபிஸில் எந்த சேதமும் இல்லை. அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் மட்டும் 40 மில்லியன் டாலர்களை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்