எரிந்து சாம்பலான 50,000 வாக்கு இயந்திரங்கள் - எங்கே, எப்படி?

செவ்வாய், 10 மார்ச் 2020 (14:26 IST)
வெனிசுவேலா நாட்டில் ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் எரிந்து சாம்பலானதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
வெனிசுவேலா தலைநகரான கராகஸ் அருகே உள்ள கிடங்கில் பற்றிய தீ விபத்தினால் வாக்கு இயந்திரங்களுடன் சேர்ந்து தேர்தலுக்காகப் பயன்படுத்த வைத்திருந்த 582 கணினிகளும் தீக்கிரையானதாக அந்நாட்டுத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப் போகுமா என்பதனை அவர் தெரிவிக்கவில்லை. வாக்கு இயந்திரங்களும், கணினிகளும் 65,000 சதுர அடி கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை அங்கு பெரும் தீ ஏற்பட்டது. ஆனால், தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்