நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

திங்கள், 21 அக்டோபர் 2019 (21:40 IST)
ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது.
 
அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது.
 
2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த சோதனை திட்டங்கள் நிறைவேறினால் 2022 அல்லது 2023ஆம் ஆண்டுக்களில் இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவைகள் இயக்கப்படும்.
 
எந்தவொரு பயணிகள் விமானமும் இவ்வாறு முழுமையாக பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றி செல்லும் வசதிகளுடன் இவ்வளவு நீண்ட தூர பயணப் பாதையில் இயங்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
போயிங் 787-9 ரக விமானம்
 
கிழக்கு ஆஸ்திரேலியாவை கடந்து இரவு நேரம் வரை பயணிகள் விழித்திருந்தனர், ஆறு மணி நேரத்திற்கு பிறகு நல்ல கார்போஹைட்ரேட் உணவு வழங்கப்பட்டது.
 
இந்த விமான சோதனையில் விமான ஓட்டுனரின் மூளையின் சிற்றலை செயல்பாடு மெலடோனின் அளவுகள், எச்சரிக்கை தன்மை, மற்றும் பயணிகளுக்கான உடற்பயிற்சி வகுப்புகள் மேலும் பல மணி நேரம் பயணம் செய்வதால் பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கம் பற்றிய பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.
 
விமான போக்குவரத்து சேவையில் இது மிக முக்கியனது. உலகின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மக்கள் எவ்வாறு பயணிக்கிறார்கள் என்பதை துரிதத்தப்படுத்தும் ஒரு வழக்கமான சேவையின் மாதிரிதான் என்று குவாண்டாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆலென் ஜோய்ஸ் கூறியுள்ளார்.
 
சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாக இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களை இயக்குவதில் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது .
 
கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் , சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் வரை கிட்டத்தட்ட 19 மணிநேரம் பயணிக்கும் நீண்ட தூர விமானத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இதுவே உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் வழக்கமான பயணிகள் விமானமாக தற்போது விளங்குகிறது.
 
கடந்த ஆண்டு, குவாண்டாஸ் பெர்த்தில் இருந்து லண்டனுக்கு 17 மணி நேர இடைவிடாத விமான சேவையைத் துவங்கியது , அதே நேரத்தில் கத்தார் ஏர்வேஸ் ஆக்லாந்து மற்றும் தோஹாவுக்கு இடையே 17.5 மணி நேர சேவையை இயக்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்