தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி தீவிரம் அடைந்ததால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக இன்று சிவகெங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கோவை, கன்னீயாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அதாவது தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது