வலதுசாரி அமைப்பை முத்தம் மூலம் கடுப்பேற்றும் ஒருபாலுறவினர்

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (13:24 IST)
தீவிர வலதுசாரி அமைப்பான 'ப்ரௌட் பாய்ஸ்' அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அதே பெயருள்ள ஹேஷ்டேகில் தங்கள் அன்புக்குரியவர்கள் உடன் தாங்கள் இருக்கும் படங்களையும் ஒருபாலுறவுக்கு ஆதரவான படங்களையும் ஆண் ஒருபாலுறவுக்காரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
 
அமெரிக்காவில் இயங்கும் தீவிர வலதுசாரி அமைப்பான ப்ரௌட் பாய்ஸ், அந்நாட்டில் வெளிநாட்டவர் குடியேற்றத்துக்கு எதிரானது. #ProudBoys எனும் ஹேஷ்டேக் மூலம் கடந்த ஒருவாரத்தில் சுமார் ஒரு லட்சம் படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன. தாங்கள் ஒருபாலுறவுக்கு எதிரானவர்கள் அல்ல என்று அந்த அமைப்பு இப்போது தெரிவித்துள்ளது.
 
கனடிய - பிரிட்டிஷ் பூர்விகத்தைக் கொண்ட கவின் மெக்கின்ஸ் என்பவரால் இந்த அமைப்பு 2016இல் தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். கனடிய ஆயுதப் படையைச் சேர்ந்த இரு ஆண்கள் முத்தமிடும் படம் ஒன்றும் இந்த ஹேஷ்டேகை பயன்படுத்திப் பகிரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்