ட்ரம்ப் உடல் நிலை எப்படி இருக்கிறது??

ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (13:11 IST)
ட்ரம்ப் உடல்நலம் குறித்து அதிக பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.
 
அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவில் மெலனியா ட்ரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் “இருவரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரொனாவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்” என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் வால்டர் ரீட் மருத்துவமனையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்புக்கு 74 வயதாகும் நிலையில் அவரது உடல்நலம் குறித்து அதிக பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ட்ரம்புக்கு முதலில் அவரது வயது தான் முதன்மையான ஆபத்து காரணியாக இருக்கும். டிரம்ப் உடல் பருமனாகவும் இருக்கிறார். பி.எம்.ஐ. என அழைக்கப்படும் உடல் நிறை குறியீட்டு எண் 30-ஐ தாண்டி உள்ளது. 
 
உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் வெளிப்பாடுதான். கொழுப்பு கூடுதலாக இருக்கிறது. இதை குறைக்க மருந்து எடுத்துக்கொள்கிறார். இந்த நிலை, கொரோனா வைரஸ் தொற்று சிக்கல்களுக்கான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என அச்சம்  தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்