சட்டவிரோத சிறுநீரக விற்பனை: சர்ச்சையில் அப்பல்லோ மருத்துவமனை

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (18:42 IST)
தில்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

 
குறைந்தபட்சம் ஐந்து பேராவது அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தங்கள் சொந்த சிறுநீரகங்களை சுமார் 6,000 டாலர்களுக்கு விற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 
இது இந்தியாவில் சட்ட விரோதம் என்பதால், போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதை வைத்து தங்கள் உறவினர்களுக்கு சிறுநீரகங்களை தானம் செய்வதாக மருத்துவர்களை திசை திருப்பிவிடுகிறார்கள்.
 

 
இதுவரை குறைந்தது ஐந்து பேர் வரை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், இரு மூத்த மருத்துவர்களின் உதவியாளர்களும் அடங்குவர்.
 
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், இது பெரும் கவலையளிப்பதாகவும், தேவையான தகவல்களை காவல் துறைக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்