கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுகிறதா? - பல்வேறு நாடுகளில் அதிகரிக்கும் எண்ணிக்கை

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:48 IST)
கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில்  10,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது.
 
அதுபோல திங்கட்கிழமை 381 பேர் கோவிட்-19 நோயால் பலியாகி உள்ளனர். அதுபோல ஆஸ்திரேலியா சுகாதார அமைச்சகமும், மக்களுக்கு கொரோனா தொடர்பான  எச்சரிக்கை விடுத்துள்ளது. உடற்பயிற்சி கூடங்களிலிருந்து பரவ தொடங்கி இருக்கலாம் எனும் நம்பப்படும் புதிய கிளஸ்டர் அறியப்பட்டதை அடுத்து இந்த  எச்சரிக்கையை விடுத்துள்ளது அந்நாட்டு அரசு.
 
புதன்கிழமை வரை சிட்னியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் விக்டோரியா பகுதியில் கொரோனா தொற்று  கணிசமான அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 7,25,991ஆக உள்ளது.
 
அதுபோல பிரான்ஸிலும் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இரண்டு என்ற அளவில் இருந்த சிவப்பு மண்டலங்கள் 21ஆக  அதிகரித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்