'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

Prasanth Karthick
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (12:35 IST)

கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அன்றைய இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கும், மறைந்த பாஜக தலைவரான சுஷ்மா ஸ்வராஜுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

 

சுஷ்மாவின் கேள்விக்கு மன்மோகன் சிங், கவிஞர் இக்பாலின் கவிதை ஒன்றை பதிலாக அளித்தார்.

 

நாடாளுமன்றத்தில் இப்படியான வாதங்களில் மிக அரிதாகவே மன்மோகன் சிங் ஈடுபடுவதைக் காண இயலும். இந்த கவிதையை கேட்ட பிறகு சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பலரும் மகிழ்ச்சியாக அதை எடுத்துக் கொண்டனர்.

 

எதைப் பற்றியும் பேசவே பேசாத பிரதமர் மன்மோகன் என்ற கருத்து உண்டு.

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டு ஆட்சிக்காலத்திலும், பிரணாப் முகர்ஜி அல்லது ப. சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களே அரசின் நிலைப்பாடு குறித்து எப்போதும் பேச முன்வருவார்கள்.

 

மன்மோகன் சிங் எப்போதும் அமைதியாக இருக்கவில்லை. அரசியல் நிபுணர்கள், மன்மோகன் சிங் மிகப்பெரிய அளவில் உரையாற்றமாட்டார் ஆனால் மிகவும் நேர்த்தியான பதில்களை அவர் வழங்குவதுண்டு என்று கூறுகின்றனர்.

 

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்மோகன் சிங், தான் அமைதியான பிரதமர் இல்லை என்று குறிப்பிட்டார்.

 

"என்னுடைய வேலைகள் குறித்து நான் பெருமையாக பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால், என்னுடைய பணிகாலத்தில் நான் ஊடகங்களில் பேச ஒருபோதும் பயந்தது இல்லை. நான் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை சந்தித்து வந்தேன். வெளிநாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும்போது, நான் விமானத்திற்குள் செய்தியாளர்களை சந்திப்பேன். அல்லது, இந்தியாவுக்கு வந்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பேன்," என்று கூறினார்.

 

மோதி ஆட்சி மீது அவர் வைத்த விமர்சனமாக இது பார்க்கப்பட்டது.

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது அவரின் பணி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

பிரதமர் அலுவலகத்தின் முழு கட்டுப்பாட்டையும் சோனியா காந்தி எடுத்துக்கொண்டார் என்று குற்றம்சாட்டியது பாஜக. மன்மோகன் சிங்கின் அரசியல் பலம் கேள்விக்கு உள்ளானது.

 

 

நாட்டின் பொருளாதாரத்தில் நாம் அடைந்த சாதனைகள் நிச்சயமாக வரலாற்றில் நினைவுகூறப்படும் என்று மன்மோகன் தெரிவித்தார்.

 

கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் அவர் பட்ட மேற்படிப்பைப் படித்தார். பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார். மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும், திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும், நாட்டின் நிதி அமைச்சராகவும் பிறகு பிரதமராகவும் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வந்தார். மன்மோகனின் பொருளாதார மற்றும் அரசியல் பயணங்கள் மகத்தானவையாக இருந்தது.

 

மேலும், இந்திரா காந்தி உட்பட 7 பிரதமர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார்.

 

அவருடைய இந்த அரசியல் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

 

சிறு வயதிலேயே தாயை இழந்த மன்மோகன்
 

மன்மோகன் சிங், பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 'கஹ்' என்ற கிராமத்தில் 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி அன்று பிறந்தார்.

 

மன்மோகன் பிறந்து சில மாதங்களே இருந்த போது அவருடைய அம்மா இறந்துவிட்டார். அவருடைய அப்பா வேலைகளுக்காக அடிக்கடி வெளியே சென்றுவிடுவார். தன்னுடைய உறவினர் வீட்டில் அவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பாட்டி, அவரை பார்த்துக் கொண்டார் என்று சஞ்சய் பாரு, 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளரான அவர், மன்மோகனுக்கு ஊடகவியல் ஆலோசகராக ஒருமுறை பணியாற்றியுள்ளார்.

 

அவருடைய சொந்த கிராமத்தில் ஆரம்பப் பள்ளியோ, சுகாதார மையமோ இல்லை. பல மைல்கள் நடந்தே அவர் பள்ளிக்கு சென்றார். மின்சார வசதிகள் போதுமானதாக இல்லாத அந்த காலத்தில் அவர் மண்ணெண்ணெய் விளக்கு வைத்து இரவு நேரங்களில் படிப்பார்.

 

மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்ட மன்மோகன் சிங் படிப்பில் சிறந்து விளங்கினார்.

 

 

1947ம் ஆண்டு, பிரிவினைக்குப் பிறகு மன்மோகன் சிங் அவருடைய குடும்பத்தோடு இந்தியாவுக்கு வந்தார். அவர்கள் ஆரம்பத்தில் உத்தராகண்டில் அமைக்கப்பட்டிருந்த ஹல்த்வானி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

 

பிரிவினையால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, அவருடைய தேர்வுகளை அவரால் எழுத முடியாமல் போனது. இந்தியாவில் அவர் அந்த தேர்வுகளை எழுதினார். பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க சென்றார் என்று, மூத்த பத்திரிகையாளர் மனினி சாட்டர்ஜி பிபிசி மராத்திக்கு தெரிவிக்கிறார்.

 

கடந்த 1991ம் ஆண்டில் ஒன்றிய நிதி அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு, அவரின் பால்ய கால நினைவுகளை விரிவாக நேர்காணல் ஒன்றில் மன்மோகன் சிங் பகிர்ந்தார் என்று சாட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

 

இந்தியாவுக்கு வந்த பிறகும் கூட, அவரின் குடும்ப சூழல் நிச்சயமற்றதாக இருந்தது. அகதிகள் முகாமில் வசித்த பிறகு அமிர்தசரஸ், பட்டியாலா, ஹோஷிப்பூர் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் அவர் வாழ்ந்தார்.

 

அவரின் குடும்ப சூழல் மோசமாக இருந்தது. ஆனாலும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு தனக்கு கிடைத்த கல்வி உதவித்தொகையை வைத்து அவர் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழங்களில் மேற்படிப்புகளை மேற்கொண்டார்.

 

"அத்தகைய பல்கலைக்கழங்களுக்கு செல்லும் சூழலில் நான் இருக்கவில்லை. ஆனால், நான் இந்தியா வந்த பிறகு நன்றாக படித்தேன். அதிர்ஷ்டமும் எனக்கு கைகொடுத்ததால் எனக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன," என்று மன்மோகன் சிங் அமெரிக்க ஊடகவியலாளர் சார்லி ரோஸுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நேர்காணலை அவர் 2004ம் ஆண்டு அமெரிக்காவில், ஐ.நா. நிகழ்வு ஒன்றில் பங்கேற்க சென்றபோது வழங்கினார்.

 

இந்தியா ஏன் ஏழ்மையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள நான் பொருளாதார படித்தேன் என்று அவர் ஒருமுறை கூறியுள்ளார்.

 

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த மன்மோகன் சிங், முதலாளித்துவத்தை ஆதரித்தார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அது தேவை என்று அவர் கருதினார்.

 

கடந்த 1991ம் ஆண்டு அவர் நிதி அமைச்சராக இருந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை உலகத்திற்காக திறந்துவிட்டார். தாராளாமயமாக்கலை நோக்கி நாடு நகர்ந்தது.

 

சார்லியின் அந்த நேர்காணலில், "நீங்கள் அப்படியான ஒரு குடும்ப சூழலில் இருந்து வருகிறீர்கள். இருந்தும் ஏன் நீங்கள் முதலாளித்துவம் மற்றும் சுதந்திர சந்தையை நம்பினீர்கள். ஏற்கனவே, இந்தியாவில் ஏழ்மையும் சமத்துவமின்மையும் நிலவுகிறது. ஏன் பொதுவுடைமைக்கும், திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திற்கும் ஆதரவு அளித்து அதனை மேம்படுத்த முயலவில்லை?" என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

 

 

பொருளாதார சமத்துவம் என்பது குறித்து நாங்கள் தொடர்ச்சியாக சிந்தித்து வருகிறோம். ஆனால், முதலாளித்துவத்தில் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இருக்கிறது. இது ஏழ்மையை ஒழிக்க உதவும் என்று சிங் கூறினார்.

 

அரசியலுக்கு முன் மன்மோகன் சிங்
 

ஆக்ஸ்ஃபோர்டில் முனைவர் படிப்பை முடித்த பிறகு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு டெல்லி பொருளாதாரப் பள்ளியிலும் அவர் பேராசிரியராக பணியாற்றினார்.

 

1971ம் ஆண்டு அவர் இந்திய அரசின் வர்த்தகத்துறையில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். அப்போது இருந்து அவர் இந்திய அரசுக்காக பணியாற்றி வந்தார்.

 

1972ம் ஆண்டு அவர் நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

 

பிறகு திட்ட அறிக்கையின் துணைத்தலைவர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமர் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அவர் வகித்தார்.

 

அவரின் அரசியல் வருகை மிகவும் சுவாரசியமானது.

 

கடந்த 1991ம் ஆண்டு கோடை காலத்தில் இந்திய அரசியலில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கவனித்து வந்தார் மன்மோகன் சிங்.

 

சந்திரசேகரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு நரசிம்ம ராவ் பிரதமர் ஆனார்.

 

அதேநேரத்தில், இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருள், உரம் மற்றும் இதர பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நிய செலாவணி மட்டுமே இந்திய கருவூலத்தில் இருந்தது.

 

ஒருபுறம், வளைகுடா நாடுகளில் நடைபெற்ற போர்களின் காரணமாக, எரிபொருளின் விலை அதிகரித்துக்கொண்டே சென்றது. மற்றொருபுறம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது நாடு.

 

இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து எந்த விதமான கடன்களும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாட்டை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கேள்வியை எதிர்கொண்டது மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும்.

 

அதேநேரத்தில், 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீட்டை வெளிநாடு வாழ் இந்தியர்கள் திரும்பப் பெற்றனர்.

 

அன்னிய செலாவணி தொடர்பான முடிவுகளை எட்டவில்லை என்றால் இந்தியாவின் இறக்குமதி 1991ம் ஆண்டு ஜூலை மாதத்தோடு ஸ்தம்பித்திருக்கும்.

 

நரசிம்ம ராவ் அந்த நேரத்தில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சிறப்பு பொருளாதார நிபுணர் தேவை என்று கருதினார்.

 

நிதி அமைச்சர் பொறுப்புக்கான ஆட்களை அவர் தேட ஆரம்பித்தார். அரசியலுக்கு வெளியே உள்ள ஒருவர் தான் இந்த பொறுப்புக்கு சரியானவர் என்றும் அவர் நம்பினார். ஐ.ஜி.பட்டீல் மற்றும் மன்மோகன் சிங் என இருவரின் பெயர்கள் அவர் முன்னால் வைக்கப்பட்டது.

 

மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சி.அலெக்சாண்டரிடம் இந்த தகவலை சிங்கிடம் தெரிவித்து, அவரின் ஒப்புதலைப் பெறும் பணிக்காக நியமிக்கப்பட்டார்.

 

அலெக்ஸாண்டர் பிரதமரின் முதன்மை செயலாளராக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் பணியாற்றினார். இதனை தன்னுடைய சுயசரிதை புத்தகமான 'த்ரோ தி காரிடர்ஸ் ஆஃப் பவர்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

தூங்கி எழுந்த மன்மோகன் சிங்கிடம் அதிகாலையில் முதல் தகவலாக இதைக் கொண்டு போய் சேர்த்தார் அலெக்சாண்டர்.

 

 

அந்த பொறுப்பை ஏற்ற அவர் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

 

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க நாட்டின் கையிருப்பில் இருந்த தங்கம் அடமானம் வைக்கப்பட்டது. பிறகு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொருளாதாரத்தில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அடமானம் வைத்த தங்கத்தை மீட்டது இந்தியா.

 

நிதி அமைச்சராக பொறுப்பேற்று நாடாளுமன்ற பயணத்தை துவங்கினார் சிங்.

 

தேர்தலுக்குப் பிறகு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அவர். பிரான்ஸ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் ஹூகோவின் பிரபலமான வாசகத்தை மேற்கோள்காட்டி தன்னுடைய உரையை அவர் முடித்தார்.

 

"ஒருவருக்கான காலம் கைக்கூடினால், பூமியில் எந்த சக்தியும் அவரின் சிந்தனைகளை நிறுத்த முடியாது" என்று விக்டர் ஹூகோவை மேற்கோள் காட்டி கூறினார்.

 

"இந்தியா அதனுடைய சந்தையை உலக நாடுகளுக்காக திறந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. உலகத்தில் உள்ள எந்த சக்தியும் இனி நம்மை தடுக்க முடியாது," என்று பேசினார் அவர்.

 

1991ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி இந்தியாவின் பொருளாதார சந்தை உலக நாடுகளுக்காக திறந்துவிடப்பட்டது.

 

இந்த புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவே, 2024ம் ஆண்டு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது. மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

 

மன்மோகன் சிங் பிரதமரான கதை
 

2004ம் ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாய் தோற்கடிக்கப்பட்டார்.

 

அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாஜகவினர், குறிப்பாக சுஷ்மா ஸ்வராஜ் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்